ராஜபக்ச குடும்பத்தில் ஒவ்வொருவராக மக்கள் தயாரென்றால் தாமும் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடத் தயார் என தெரிவித்து வரும் நிலையில் தமது தரப்பும் தமது வேட்பாளரின் வெற்றிக்காக உழைக்கத் தயாராக இருப்பதாக தெரிவிக்கிறார் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவையே வேட்பாளராகக் களமிறக்கும் என திட்டவட்டமாக தெரிவித்து வருகிறது.
எனினும், தொடர்ந்தும் மர்மமாக உள்ள ஒக்டோபர் நட்புறவையும் மீறி, மஹிந்த தரப்பில் அவரது குடும்பத்திலிருந்து ஒருவரே வேட்பாளராக்கப்படுவார் எனும் எதிர்பார்ப்பு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment