![](https://i.imgur.com/nAq2ZmV.png?1)
மொனராகல பேருந்து தரிப்பு நிலையம் அருகே சட்டவிரோதமாக வெடிபொருட்கள் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டு வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
பின்ன கலேவத்த பகுதியைச் சேர்ந்த 34 வயது நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சட்டவிரோத வெடிபொருட்களுடன் குறித்த நபர் செல்வது குறித்து கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் பின்னணியில் சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment