சேனா புழுவினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு - sonakar.com

Post Top Ad

Wednesday 23 January 2019

சேனா புழுவினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு


நாடெங்கிலும் விவசாயத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ள 'சேனா' கம்பளிப் புழுவினால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு, ஏக்கர் ஒன்றுக்கு அதிக பட்சமாக ரூபா 40,000 நட்ட ஈடு வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக விவசாய, கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, கிராமியப் பொருளாதார அலுவல்கள், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்தார். 



இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது இயற்கை அழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள 7 வகை பயிர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், அத்தோடு 'சேனா' கம்பளிப் புழுவினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு இன்று சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். இந்த சந்திப்பில் பிரதியமைச்சர் அமீர் அலி அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.

-கஹட்டோவிட்ட ரிஹ்மி

No comments:

Post a Comment