தடைகளைக் கடந்து தயாராக இருக்கிறேன்: கோத்தா! - sonakar.com

Post Top Ad

Sunday, 13 January 2019

தடைகளைக் கடந்து தயாராக இருக்கிறேன்: கோத்தா!


ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவதற்கு இருந்த அனைத்து தடைகளையும் சமாளித்து விட்டதாக தெரிவிக்கிறார் கோத்தபாய ராஜபக்ச.



தான் போட்டியிடுவது உறுதியானால் அமெரிக்க பிரஜாவுரிமையை விட்டுக்கொடுக்கவுள்ளதாக முன்னர் தெரிவித்திருந்த அவர் தற்போது தாம் தடைகளைக் கடந்து விட்டதாக தெரிவிக்கிறார்.

எனினும், கோத்தா ஒரு போதும் போட்டியிடப் போவதில்லையெனவும் முதலீட்டாளர்களை கவரவும் பெரமுனவுக்கான நிதியுதவிகளை அதிகரிக்கவுமே இவ்வாறான அறிக்கைகளை விடுவதாகவும் இடது சாரி கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. இந்நிலையில் பெரமுன தனியான வேட்பாளரை நிறுத்தும் என தெரிவித்து வருகின்றமையும் ஸ்ரீலசுட்சி சார்பில் மைத்ரியே மீண்டும் போட்டியிடுவார் என தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment