ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் பதவிகளில் ஏலவே அனுபவம் உள்ள மஹிந்த ராஜபக்ச, மைத்ரி - ரணில் கூட்டாட்சியில் மீண்டும் ஏதாவது ஒரு பதவியைப் பெற வேண்டும் எனும் நீண்ட போராட்டத்தின் விளைவில் இன்று எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் தனது பணிகளை ஆரம்பித்துள்ளார்.
சம்பிரதாயபூர்வ நிகழ்வுகளும், கோலாகலமான வரவேற்புமாக தனது பினாமி கட்சி உறுப்பினர்களின் வரவேற்புடன் மஹிந்த தனது அலுவலகத்தைப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.
இதேவேளை எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தையும் விரைவில் அவர் பெற்றுக்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment