ஜனாதிபதி வேட்பாளராகத் தாம் களமிறக்கப்பட்டால் அமெரிக்க பிரஜாவுரிமையைக் கைவிடப் போவதாக கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ள நிலையில் அவர் தற்போது அமெரிக்க பிரஜாவுரிமையைக் கை விட்டு விட்டதாக அவரது ஆதரவாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.
இதன் பின்னணியில் தற்போது விக்கிபீடியாவில் அவரது பிரஜாவுரிமை 'இலங்கையர்' என குறிப்பிடும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மஹிந்த ராஜபக்ச அரசின் நிர்வாகத்தில் பங்கேற்கும் நிமித்தம் கோத்தாவுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment