வவுனியா - யாழ் வீதியில் நிறுவப்பட்டிருக்கும் பொலிஸ் உருவ அட்டைக்கு லஞ்சம் வழங்குவது போன்று பாவனை செய்து படம் எடுத்த இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிசாரைக் கேலிக்குட்படுத்தியதன் பின்னணியிலேயே தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் மேற்படி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, வவுனியா - யாழ் வீதியில் பெருமளவு பொலிசார் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன் வீதிப் போக்குவரத்து விதிகளை மீறுவதாக பொலிசாரால் நிறுத்தப்படுவோர் வாதப்பிரதிவாதங்களில் ஈடுபடும் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment