புதிய ஆளுனர்கள் நியமனத்திற்கு ஏதுவாக அனைத்து மாகாணங்களின் ஆளுனர்களையும் அண்மையில் ஜனாதிபதி பதவி விலகக் கோரியிருந்த நிலையில் இன்று பிற்பகல் புதிய நியமனங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி இன்று பி.ப 2 மணியளவில் ஆளுனராகப் பதவியேற்கவுள்ளதாக தகவல் அறியமுடிகிறது.
பெரும்பாலும் கிழக்கு மாகாண ஆளுனராகவே அசாத் சாலி நியமிக்கப்படுவார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் முஸ்லிம் ஆளுனர் ஒருவரை மைத்ரி நியமிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment