அமைச்சரவைப் பதவிகளை அதிகரிக்கவே தேசிய அரசாங்கம் உருவாக்க ஐக்கிய தேசியக் கட்சி பாடுபடுவதாக தெரிவிக்கிறார் டலஸ் அழகப்பெரும.
நாட்டின் முன்னேற்றத்திற்காகவன்றி, தேசிய அரசமைப்பதன் ஊடாக அமைச்சு, பிரதியமைச்சு மற்றும் ராஜாங்க அமைச்சுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவே இம்முயற்சி இடம்பெற்றுவருவது என அவர் விளக்கமளித்துள்ளார்.
19ம் திருத்தச் சட்டத்துக்கமைவாக அமைச்சர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை தேசிய அரசாங்கம் அமையும் பட்சத்தில் அதனை 45 ஆக உயர்த்த முடியும் என்பதன் பின்னணியில் ரணில் அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதுடன் ஐக்கிய தேசியக் கட்சி பின் வரிசை உறுப்பினர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment