பறகஹதெனிய தேசிய பாடசாலையிலிருந்து மருத்துவ பீடத்துக்கு மூவர்! - sonakar.com

Post Top Ad

Sunday, 6 January 2019

பறகஹதெனிய தேசிய பாடசாலையிலிருந்து மருத்துவ பீடத்துக்கு மூவர்!


இம்முறை வெளியான க பொ த. உயர் தரப் பரீட்சையில் பறகஹதெனிய தேசிய பாடசாலையின் வரலாற்றில்  முதல் முறையாக மூன்று மாணவர்கள் மருத்துவ பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அதிபர்  ஏ. எம். எம். சபருல்லாக்கான் தெரிவித்தார்.


உயிரியல் பிரிவில் ஏ. ஏ ரிம்சியா 3 ஏயும்,  எம். எஸ். எவ்,  சம்ரா 2 ஏ, 1 பி யும், எம். எப், எம். இர்ஹாம் 2 ஏ 1 பியும் பெற்று மருத்துவ பீடத்திற்குத் தெரிவுவாகியுள்ளனர். இதில் பொறியியல் துறைக்கு  எம். என். எம். நபீழ் 1 ஏ, 2 பியுடன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

வர்த்தகத் துறையில் ரிஹாம் 3 ஏயும்  எம். ஐ. எம். இன்சமாம் 3 பி யும்,  எம். ஐ.  எம். இனாஸ் 3 பியும் எம். ஆர். எம், ரிம்சான் 2 ஏ 1 எஸ் ஆகிய பெறுபேறுகளுடன் சித்தியடைந்துள்ளனர். கலைத்துறையில்  எம். என். எப். நதிஹா 2 ஏ 1 பி யும் என்ற அடிப்படையில் சித்தியடைந்துள்ளார். இதற்காக அயராது உழைத்து ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.

-இக்பால் அலி

No comments:

Post a Comment