இலங்கையில் போதைப் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டு அண்மையில் கைதான பங்களதேஷ் பிரஜைகளை விசாரிக்க அந்நாட்டிலிருந்து விசேட புலனாய்வுத்துறை அதிகாரிகள் இலங்கை வந்துள்ளனர்.
4500 மில்லியன் ரூபா பெறுமதியான பொதைப் பொருளுடன் குறித்த நபர்கள் கொழும்பில் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் பங்களதேஷ் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொள்ளும் நிமித்தம் இலங்கை வந்துள்ளதுடன் டி.ஐ.ஜி லத்தீபுடன் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர்.
2009 யுத்த நிறைவின் பின் இலங்கை, போதைப் பொருள் வர்த்தக மையமாக மாறியுள்ளதாக அண்மையில் ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment