சரத் பொன்சேகா - பாலித தெவரப்பெரும இடையே இடம்பெற்று வரும் கருத்து மோதலை முடிவுக்குக் கொண்டுவருமாறு அறிவுறுத்தியுள்ளார் ரணில் விக்கிரமசிங்க.
அண்மைக்காலமாக இருவரும் விமர்சனக் கருத்துக்களை வெளியிட்டு வருவதுடன் அது தனிமனித தாக்குதலாக மாறியுள்ள நிலையில் ஒரே கட்சியைச் சேர்ந்த இருவர் பகிரங்க வெளியில் கருத்து மோதலில் ஈடுபடுவதை தவிர்க்க ரணில் தலையிட்டுள்ளார்.
பொன்சேகா நல்ல வேளையாக ஜனாதிபதியாகவில்லையெனவும் அவரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்ததையிட்டு கவலையடைவதாகவும் அண்மையில் பாலித தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment