ஞானசாரவுக்கு பெப்ரவரி 4ம் திகதி பொது மன்னிப்பு வழங்கப்படுவது ஏறத்தாழ உறுதியாகி வரும் நிலையில் துமிந்த திசாநாயக்கவையடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அரசியல் பீட உறுப்பினர் சாந்த பண்டாரவும் அதனை உறுதி செய்துள்ளார்.
துமிந்த சில்வாவை விடுவிக்க ஜனாதிபதியின் தூண்டுதலிலேயே பொதுமக்கள் கையொப்பங்கள் சேகரிக்கப்படுவதாக ஹிருனிகா குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்நிலையில், ஞானசாரவை விடுவிக்கக் கோரி பௌத்த நிக்காயக்களின் மகாநாயக்கர்களும், சைவ கேயில்களும் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளதுடன் ஞானசாரவுக்கும் முஸ்லிம் சமூகத்துக்குமிடையில் பிணக்குகள் தீர்க்கப்பட்டுவிட்டதான தோரணையும் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment