மஹிந்த ராஜபக்சவின் பினாமி அரசியல் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொள்ள அரசியல் கட்சிகள் படையெடுத்து வருவதாக தெரிவிக்கிறார் லக்ஷ்மன் யாப்பா.
ஒக்டோபர் அரசியல் பிரளயத்தைத் தொடர்ந்து மஹிந்த தரப்பின் நெருங்கிய பேச்சாளராக மாறியுள்ள யாப்பா மேலும் தெரிவிக்கையில் இது வரை 28 அரசியல் கட்சிகள் பெரமுனவின் தலைமைத்துவத்தின் கீழ் அணி திரண்டுள்ளதாக தெரிவிக்கிறார்.
இதேவேளை, மஹிந்த ராஜபக்ச தான் பெரமுன உறுப்பினராகி விட்டதாக மேற்கொண்ட அறிவிப்பை மறுதலித்து தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் தக்க வைத்துக்கொண்டுள்ளமையும் தற்போது எதிர்க்கட்சித் தலைவராகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment