நீதிமன்ற அவமதிப்பின் பின்னணியில் சிறைப்படுத்தப்பட்டுள்ள பொது பல சேனாவின் ஞானசாரவுக்கு பொது மன்னிப்பை வழங்கி அவரை விடுவிக்குமாறு பௌத்த நிகாயக்கள் அனைத்தினதும் மகா நாயக்கர்கள் கூட்டிணைந்து ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தலதா மாளிகையின் தியவட்டனே நிலமேயும் இதற்கான கோரிக்கையை விடுத்துள்ள அதேவேளை சுதந்திர தினத்தன்று ஞானசாரவுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் என துமிந்த திசாநாயக்க அண்மையில் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.
ஏலவே நோய்வாய்ப்பட்டிருந்த ஞானசாரவே சிறைச்சாலை வைத்தியசாலையில் வைத்து பராமரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment