மேல் மாகாண ஆளுனர் அலுவலகத்தில் 'பொது மக்கள்' தினம்! - sonakar.com

Post Top Ad

Thursday, 17 January 2019

மேல் மாகாண ஆளுனர் அலுவலகத்தில் 'பொது மக்கள்' தினம்!


மேல் மாகாண ஆளுனரை பொது மக்கள் சந்திப்பதற்கென பிரத்யேக 'பொது மக்கள்' தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து சோனகர்.கொம்முக்கு கருத்து வெளியிட்டுள்ள ஆளுனர் அசாத் சாலி, தினசரி மக்கள் தம்மை சந்திக்க வந்து கொண்டிருப்பதாகவும் அதனை ஒழுங்கு படுத்தி மக்கள் சந்திப்புக்கென பிரத்யேகமாக நேரம் ஒதுக்கும் நிமித்தம் இவ்வேற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் இப்பின்னணியில் புதன் கிழமை தோறும் காலையில் மக்கள் சந்திப்புக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பிரத்யேக நேர ஒதுக்கீட்டின் பயனாக மக்கள் பிரச்சினை தொடர்பில் அதிக கவனம் செலுத்த முடிகிறது எனவும் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட இவ்வேற்பாட்டின் ஊடாக பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்பட்டிருப்பதாகவும், ஏனைய நாட்களிலும் தம்மால் முடிந்தளவு மக்களை சந்திக்கத் தயாராகவே உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-AM

No comments:

Post a Comment