வனஜீவராசிகள் அமைச்சராக இருந்து அரசாங்க நிதியை பொன்சேகா வீணடித்துள்ளதாக பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும தெரிவித்த கருத்துக்கு காரசாரமான பொன்சேகா பதிலளித்ததையடுத்து இருவருக்குமிடையிலான கருத்து மோதல் வலுப்பெற்று வருகிறது.
தெவரப்பெரும அமைச்சுப் பதவிக்கு சரி வர மாட்டார் எனவும் எங்காவது விவசாயம் செய்யவே லாயக்கு எனவும் பதிலளித்திருந்த பொன்சேகா, அவரை தனது அலுவலகத்தின் சிற்றூழியருக்குக் கூட பிடிக்காது என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மீண்டும் பதிலளித்துள்ள தெவரப்பெரும, நல்ல வேளையாக இவ்வாறான ஒரு மன நோயாளி ஜனாதிபதியாக வரவில்லையெனவும் அவருக்காக தேர்தல் பிரச்சாரம் செய்ததையிட்டு கவலை கொள்வதாகவும் தெரிவித்துள்ளதுடன் முடிந்தால் தேர்தலில் நின்று 2000 வாக்குகள் பெற்றுக் காட்டும்படி சவால் விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment