வத்துகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட பன்விலையில் அமைந்துள்ள வரகாலந்த முஸ்லிம் வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக் குறையை உடனடியாக நிவர்த்தி செய்யக் கோரி அப் பாடசாலையின் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து இன்று 09 ம் திகதி காலை வத்துகாமம் கல்வி வலயக் காரியாலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடு பட்டனர்.
இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெற்றோர்கள் கருத்து தெரிவிக்கையில், 9 ம் ஆண்டு வரை சுமார் 65 தமிழ் முஸ்லிம் மாணவ மாணவிகள் கல்வி கற்கும் இப் பாடசாலையில் நான்கு ஆசிரியர்கள் மட்டுமே இருப்பதாகவும் முக்கிய பாடங்களாகிய தமிழ், சமயம், ஆங்கிலம் உட்பட பிரதான பாடங்களுக்கு அசிரியர்கள் இல்லை என்றும் தெரிவித்தனர்.
இது தொடர்பாக வத்துகாமம் வலய கல்வி பனிப்பாளர் திருமதி எச்.கே. விஜேரத்னவிடம் வினவாபோது ஊடகங்களுக்கு கருத்துதெரிவிக்க முடியாது என்று கூறினார்.
- மொஹொமட் ஆஸிக்
No comments:
Post a Comment