தமது அரசியல் எதிர்காலம் பற்றிய தீர்க்கமான முடிவொன்றை எட்டுவதற்கு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மஹிந்த எதிர்ப்பு அணி, பெப்ரவரி இறுதிக்குள் அரசோடு இணைவதா இல்லையா என்பது பற்றி முடிவெடுக்கவுள்ளதாக தெரிவிக்கிறது.
ஸ்ரீலசுகட்சியிலிருந்து அரசோடு இணைபவர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்கப் போவதில்லையென கட்சித் தலைவர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ள அதேவேளை, ஒரு சிலர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துள்ளனர்.
இந்நிலையில், தமது அரசியல் எதிர்காலத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக மைத்ரி அணியில் இருக்கும் 18 - 21 உறுப்பினர்கள் தெரிவித்து வருகின்றமையும் அவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ஆலோசனை வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment