பொலன்நறுவ, தம்பாளை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தொன்றில் அப்பகுதியின் பிரதேச உறுப்பினர் உட்பட மூவர் காயமுற்றுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கட்டுப்பாடிழந்த வாகனம், பாதையை விட்டு விலகி அங்கிருந்த கடையொன்றில் மோதி இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வாகனத்தில் பயணித்த லங்காபுர பிரதேச சபை உறுப்பினர் நாசர் ஹாஜியார் உட்பட மூவர் சம்பவத்தில் காயமுற்றுள்ளதுடன் வர்த்தக நிலையத்தின் கூரை உடைந்து வீழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-AHM Suhail
-AHM Suhail
No comments:
Post a Comment