மாவனல்லை: தலைமறைவாக உள்ள இருவரை தேடி தீவிர வேட்டை! - sonakar.com

Post Top Ad

Monday, 21 January 2019

மாவனல்லை: தலைமறைவாக உள்ள இருவரை தேடி தீவிர வேட்டை!


மாவனல்லை பகுதியில் புத்தர் சிலை உடைப்புகள் மற்றும் புத்தளம், வணாத்தவில்லில் குத்தகைக்கு எடுத்த தென்னந்தோப்பில் ஆயுதங்களை மறைத்து வைத்திருந்தமை தொடர்பில் முக்கிய சந்தேக நபர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள மாவனல்லை இளைஞர்கள் இருவரைத் தேடி தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.



குறித்த நபர்களை பிரதேச அரசியல்வாதி ஒருவர் ஊடாக பொலிசில் சரணடைய வைப்பதற்கான முயற்சிகளும் இடம்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, புத்தளத்தில் கைதானவர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்ற நிலையில் பிரதேசத்தில் அதிர்ச்சியும், ஆச்சரியமும் நிலவுவதோடு குறித்த நபர்களை அறிந்தவர்கள் என கருதப்படுபவர்களும் இவர்கள் பற்றி வெளிப்படையாக பேசுவதை தவிர்த்துக் கொள்வதை அவதானிக்க முடிகிறது.

இந்நிலையில், சந்தேக நபர்கள் 'அடிப்படைவாத' குழுவொன்றை சேர்ந்தவர்கள் என சிங்கள ஊடகங்கள் தகவல் வெளியிட்டு வருகின்றமையும் இரு கொள்கை இயக்கங்கள் தமக்கு தொடர்பில்லையென தெரிவித்து அறிக்கை விடவும், தேரர்களை சந்திக்கவும் விளைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment