றாகம போதனா வைத்தியசாலையில் அவசர சிகிக்சை பிரிவு - sonakar.com

Post Top Ad

Monday, 14 January 2019

றாகம போதனா வைத்தியசாலையில் அவசர சிகிக்சை பிரிவு





றாகமை போதனா வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட திடீர் விபத்து அவசர சிகிச்சைகளுக்கான பிரிவு சுகாதார போசணைகள் மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரட்ன, தலைமையில் இன்று 14ஆம் திகதி பிற்பகல் 3.00 மணிக்கு திறந்துவைக்;கப்படவுள்ளது. 



இந்தக் கட்டம் நான்கு மாடிகளைக் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதற்காக 1400 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. சத்திர சிக்கிச்சைகளும் இதில் செய்ய முடியும். 6 வாட்டுகள் இந்தக் கட்டத்தில் அமையப்பெற்றுள்ளது. வடகொழும்பில் மருத்துவப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு இங்கு பயிற்சிகள் பெற்றுக்கொடுக்கப்படும். 

நிர்மாணிக்கப்பட்ட பிரிவில் 480 படுக்கையறைகள் உள்ளன. றாகம வைத்தியசாலையில் மொத்தமாக 1500 படுக்கையறைகள் உள்ளன. தற்போது வருடத்திற்கு 140000 பேர்வரை இவ்வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொள்கின்றனர். அத்துடன், அண்ணளவாக 540000 பேர்வை ஓ.பி.டி. மூலம் சேவைகளை பெற்றுக்கொள்கின்றனர். கிளினிக் சேவைகளை 630000 பேர் வரை பெற்றுக்கொள்கின்றனர். 87 சிறப்பு மருத்துவர்களும், 364 மருத்துவர்களும், 830 செவிலியர்களும் இங்கு பணி புரிகின்றனர்.

-Nuzly Sulaim

No comments:

Post a Comment