
அரச வங்கிகளை மீண்டும் லக்ஷ்மன் கிரியல்லவின் பொறுப்பின் கீழ் கொண்டு வர ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இணக்கம் வெளியிட்டுள்ளார்.
அண்மையில் வெளியிடப்பட்ட குழப்பகரமான வர்த்தமானியில் பல்வேறு விடயங்கள் மாற்றிப் பிரசுரிக்கப்பட்டிருந்ததாக அமைச்சர்கள் விசனம் வெளியிட்டு வந்தனர். இந்நிலையில் முன்னர் தனது பொறுப்பின் கீழிருந்த நிறுவனங்கள் மாற்றப்பட்டமை பழிவாங்கும் செயல் என கிரியல்லவும் தெரிவித்திருந்தார்.
இப்பின்னணியில் ஜனாதிபதி அரச வங்கிகளை கிரியல்லவின் பொறுப்பின் கீழ் விட இணங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment