நீதிமன்ற அவமதிப்பின் பின்னணியில் சிறைச்சாலை வைத்தியசாலையில் வைத்து பராமரிக்கப்பட்டு வரும் ஞானசாரவை விடுவிக்க சகல மதத் தலைவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கிறார் துமிந்த திசாநாயக்க.
ஞானசாரவின் விடுதலை மையமாகக் கொண்டு பல்வேறு சிவில் சமூக நடவடிக்கைகள் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ளதுடன் இன்றும் கோட்டை புகையிரத நிலையம் முன்பாக அவரது சகாக்கள் கவனயீர்ப்பொன்றை நடாத்தியிருந்தனர்.
சிறைப்படுத்தப்படுவதற்கு முன்பதாகவே முஸ்லிம்களுடன் அரச அனுசரணையில் ஞானசார பேச்சுவார்த்தை நடாத்தியிருந்த அதேவேளை சைவ கோயில்கள் மற்றும் மகாநாயக்கர்களும் ஜனாதிபதிக்கு 'கடிதம்' அனுப்பி வைத்துள்ளதாக பிரச்சாரம் செய்யப்படுகிறது. இதேவேளை, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வாவை விடுவிக்குமாறு கோரி கையொப்பங்கள் சேகரிக்கப்படுவது ஜனாதிபதியின் பணிப்புரையிலேயே என ஹிருனிகா தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment