முஸ்லிம் பாடசாலை அதிபர்களுடன் ஆளுனர் சந்திப்பு - sonakar.com

Post Top Ad

Thursday, 31 January 2019

முஸ்லிம் பாடசாலை அதிபர்களுடன் ஆளுனர் சந்திப்பு


மேல் மாகாணத்தில் கல்வித்தரம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தேசிய ரீதியில் மூன்றாமிடத்துற்குத் தள்ளப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டி இதற்குரிய நடவடிக்கைகள் அவசியப்படுவதாக முஸ்லிம் பாடசாலை அதிபர்களிடம் தெரிவித்துள்ளார் ஆளுனர் அசாத் சாலி.


மேல் மாகாணத்தில் இயங்கும் 64 முஸ்லிம் பாடசாலைகளின் அதிபர்களை இன்று தனது அலுவலகத்தில் சந்தித்திருந்த நிலையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்த அதேவேளை, அங்கு வந்திருந்த பாடசாலை அதிபர்கள் ஆளுனருடனான சந்திப்பு திருப்தியளிப்பதாக தெரிவித்தனர்.

பாடசாலைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து தனக்கு நேரடியாகவே அறிவிக்கும்படி தெரிவித்த ஆளுனர், உடனடி நடவடிக்கைகளையெடுப்பதாகவும் வாக்குறுதியளித்துள்ளார். பாடசாலைச் சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-AM

No comments:

Post a Comment