நிந்தவூர் ஆதார வைத்தியசாலை நேற்று முன்தினம் (22) வைத்தியர் ஒருவரை தாக்க முற்பட்டு வைத்தியரை தகாத வார்த்தைகளால் திட்டிய நபர் ஒருவருக்கு எதிராக இதுவரைக்கும் எதுவித நடவடைக்கைகளும் மேற்கொள்ளாத பட்சத்தில் இன்று நிந்தவூர் வைத்திய ஊழியர்கள் அனைவரும் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இன்நிலையில் இன்று 'கிளினிக்' நடைபெறும் நாள் என்பதினால் அதிகளவான நோயாளிகள் அங்கு வருகைதந்து கிகிச்சை நடைபெறாது வீடுகளுக்கு திரும்பிச் சென்றுள்ள பரிதாப நிலையை காணாமுடிந்தது.
இச்சம்பவம் தொடர்பாக சம்மந்தப்பட்ட நபரை சம்மாந்துறை பெலிசார் வலைவீசி தேடிவருவதோடு விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்நிலையிலேயே பணிப் பகிஷ்கரிப்பு நிகழ்வதுடன் பொது மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-முஹம்மட் ஜெலீல்
No comments:
Post a Comment