மாவனல்லை பகுதியில் புத்தர் சிலைகளை சேதப்படுத்திய முஸ்லிம் இளைஞர்களின் விளக்கமறியல் எதிர்வரும் 30ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
மாவனல்லை தவிரவும் கண்டி, குருநாகல் பகுதிகளிலும் இடம்பெற்ற புத்தர் சிலை உடைப்புகளிலும் குறித்த இளைஞர்கள் சந்தேக நபர்களாக இணைக்கப்பட்டுள்ள அதேவேளை சம்பவங்களின் சூத்திரதாரிகள் எனக் கருதப்படும் முக்கிய சந்தேக நபர்கள் இருவர் தொடர்ந்தும் தமது குடும்பங்களோடு தலைமறைவாக உள்ளனர்.
தலைமறைவாக உள்ள தமது புதல்வர்களை சரணடையுமாறு அவர்களது தந்தையார் ஒலிப்பதிவு ஊடாக வேண்டுகோள் விடுத்திருந்த அதேவேளை, குறித்த சம்பவத்துக்கும் தமக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லையென ஒவ்வொரு ஜமாத்தாக அறிக்கை வெளியிட்டும், பௌத்த தேரர்களை சந்தித்து தன் நிலை விளக்கம் வழங்கியும் வருகின்றன.
ஆயினும், இவ்விளைஞர் குழு தீவிர கொள்கைச் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டே இவ்வாறான காரியத்தை செய்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
தொடர்புபட்ட செய்தி: வேறு இடங்களிலும் சிலை உடைப்பு: மாவனல்லை இளைஞர்களுக்கு மேலும் சிக்கல்!
தொடர்புபட்ட செய்தி: வேறு இடங்களிலும் சிலை உடைப்பு: மாவனல்லை இளைஞர்களுக்கு மேலும் சிக்கல்!
No comments:
Post a Comment