ஒக்டோபர் 26ம் திகதியுடன் தமது அமைச்சுப் பதவிகளை இழந்து, மஹிந்தவை ஆதரிக்கவோ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் சேரவோ முடியாதென மறுதலித்து வரும் ஸ்ரீலங்கா சுதந்திரிக் கட்சியின் உறுப்பினர்கள் இவ்வாரம் வெள்ளிக்கிழமையளவில் ஜனாதிபதியை சந்திப்பதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசுடன் இணைவதற்கான அனுமதி கோரியே இச்சந்திப்பு இடம்பெறவுள்ள அதேவேளை தம்மால் மஹிந்த அணியுடன் இணைய முடியாதென்பதால் தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கீழே தேர்தலில் போட்டியிட வேண்டும் எனவும் குறித்த குழுவினர் வலியுறுத்தி வருகின்றனர்.
எனினும், மஹிந்தவை எதிர்த்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டு சேர்ந்து ஜனாதிபதியான மைத்ரிபால சிறிசேன ஒக்டோபர் இறுதியில் மஹிந்தவை பிரதமராக்கி அவரோடு நட்புறவை வளர்த்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment