பெரமுன மற்றும் ஸ்ரீலங்க சுதந்திரக் கட்சி இணைந்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவையே அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கும் என சுதந்திரக் கட்சியினர் தெரிவித்து வருகின்ற போதிலும் அது தொடர்பில் இன்னும் முடிவொன்றும் எட்டப்படவில்லையென விளக்கமளித்துள்ளார் தினேஸ் குணவர்தன.
பெரமுன முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் சங்கம் மைத்ரியை நிராகரித்துள்ளதாக ஏலவே தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அவரையே வேட்பாளராக நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது.
ஒக்டோபரில் உருவான மைத்ரி - மஹிந்த நட்புறவின் பின்னணியில் இணக்கப்பாடுகள் எதுவும் இல்லையென பெரமுன தரப்பு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment