வெலிகம, பொரால வீதியில் பழமை வாய்ந்த பிரபல புத்தக விற்பனை நிலையமான ஹாமீம் புத்தக நிலையம் தீக்கிரையாகி சேதமடைந்துள்ளது.
பொலிஸ் நிலையத்திற்கு ஓரளவு அண்மையில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் மூன்று மாடிக் கட்டிடத்தில் அமைந்துள்ள குறித்த புத்தக நிலையமே தீக்கிரையாகியுள்ள நிலையில் குறித்த சம்பவம் இனவாத சம்பவமில்லையெனவும் மூன்றாவது மாடியிலேயே தீ பரவியுள்ளதாகவும் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் சோனகர்.கொம் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
பொலிசாரும் விரைந்த அதேவேளை ஊர் மக்களுடன் இணைந்து நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment