போதை ஒழிப்பு பற்றி ஜும்மா பிரசங்கம்: ஹலீம் வேண்டுகோள்! - sonakar.com

Post Top Ad

Monday, 21 January 2019

போதை ஒழிப்பு பற்றி ஜும்மா பிரசங்கம்: ஹலீம் வேண்டுகோள்!


ஜனாதிபதி முன்னெடுத்துள்ள போதை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் எதிர் வரும் 25 ஆம் திகதி நாட்டிலுள்ள  சகல ஜும்ஆப் பள்ளிவாசல்களிலும் போதை ஒழிப்பு தொடர்பான மார்க்கச் சொற்பொழிவினை நடாத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சர் ஹலீம்.

திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம். ஆர். எம். மலீக் தெரிவித்தார் இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில், ஜனாதிபதி முன்னெடுத்துள்ள போதை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால்துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் அவர்களின் விசேட பணிப்புரைக்கு இணங்க  முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஊடாகவும் பல வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

அந்த வகையில் எதிர் வரும் 25 ஆம் திகதி நாட்டிலுள்ள சகல ஜும்ஆப் பள்ளிவாசல்களிலும் போதை ஒழிப்பு தொடர்பான மார்க்கச் சொற்பொழிவினையினையும் எதிர் வரும் 27 ஆம் திகதி அரபு மத்ரஸா, அஹதிய்யாப் பாடசாலைகளில் போதை ஒழிப்புத் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்களை நடத்தும்படி  அமைச்சர் ஹலீம் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதேவேளை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 27 ஆம் திகதி அக்குறணை பெரிய பள்ளிவாசலில் இளைஞர்களுக்கான போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வூட்டும் விசேட மார்க்கச் சொற்பொழிவுகள் என்பன இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

-இக்பால் அலி


No comments:

Post a Comment