புத்தர் சிலை உடைப்பு மற்றும் தீவிரவாத செயற்பாடுகளை திட்டமிட்ட சந்தேகத்தின் பின்னணியில் மாவனல்லை, ஹிங்குல பகுதியைச் சேர்ந்த இரு சகோதரர்கள் தேடப்பட்டு வரும் நிலையில் ஏலவே ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், குறித்த நபர்களின் குழுவில் தொடர்பு பட்ட மேலும் ஆறு பேருடைய பெயர்கள் ஆவணம் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
தொடர்ந்தும் தலைமறைவாக இருக்கும் நபர்களின் தந்தை தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்ற அதேவேளை பலாங்கொட பகுதியில் தீவிர தேடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அண்மையில் புத்தளத்தில் இடம்பெற்ற தேடலில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment