நல்லாட்சி என தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட கூட்டாட்சி காலத்தில் பாரிய ஊழல்கள் நடந்ததாக ஒக்டோபர் அரசியல் பிரளயத்தின் போது தெரிவித்திருந்த ஜனாதிபதி அதனை விசாரிக்க ஐந்து பேர் கொண்ட ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளார்.
2015 ஜனவரி முதல் 2018 டிசம்பர் 15 வரை இடம்பெற்ற ஊழல்களை இவ்வாணைக்குழு விசாரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
முன்னைய ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையை தான் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென மஹிந்த அண்மையில் நாடாளுமன்றில் வைத்து தெரிவித்திருந்தமையும் மத்திய வங்கி ஆணைக்குழு விசாரணை அறிக்கை முழுமையாக வெளிவரவில்லையெனும் குற்றச்சாட்டுகள் நிலவுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment