தனது வளர்ப்பு நாயைக் கொண்டுவர சூரிச்சுக்கு ஸ்ரீலங்கன் விமானத்தை அனுப்பிய நபரைத் தான் எதிர்த்தரப்பினர் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கவுள்ளதாக தெரிவிக்கிறார் சம்பிக்க ரணவக்க.
ஏலவே, கொலைகார்களை - வெள்ளை வேன் கடத்தல்காரர்களை வேட்பாளராக்கக்கூடாது என குமார வெல்கம எதிர்த்தரப்பிலிருந்தே குரல் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், எமிரேட்சுடனான 10 வருட வர்த்தக கூட்டில் 14000 மில்லியன் ரூபா இலாபத்தைப் பெற்ற ஸ்ரீலங்கன் சேவை மஹிந்த - கோத்தா நிர்வாகத்தில் நஷ்டத்தில் இயங்க ஆரம்பித்து, ஒவ்வொரு குடிமகனுக்கும் 12500 ரூபா கடனை உருவாக்கி வைத்திருப்பதாகவும், தனது வளர்ப்பு நாயை சூரிச்சிலிருந்து கொண்டு வருவதற்கு ஸ்ரீலங்கன் விமானே சேவையை பிரத்யேகமாக அங்கு அனுப்பியவர் தான் பெரமுனவின் அடுத்த வேட்பாளராகப் போகிறார் எனவும் சம்பிக்க விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment