கிரலகல மாணவர்கள் விவகாரம்: பாதுகாப்பு செயலாளருடன் முஸ்லிம் பிரமுகர்கள் சந்திப்பு! - sonakar.com

Post Top Ad

Sunday 27 January 2019

கிரலகல மாணவர்கள் விவகாரம்: பாதுகாப்பு செயலாளருடன் முஸ்லிம் பிரமுகர்கள் சந்திப்பு!



கிரலகல புராதன தளத்தில் அத்துமீறி நுழைந்து படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்த நிலையில் கைதான தென் கிழக்குப் பல்கலை மாணவர்கள் விவகாரம் தொடர்பில் பாதுகாப்பு செயலாளருடன் முஸ்லிம் பிரமுகர்கள் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர்.

மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி, ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம்.அமீன் மற்றும் உப தலைவர் ஹில்மி அஹமட் ஆகியோர் கொண்ட குழு இது தொடர்பில் பாதுகாப்பு செயலாளருடன் விவாதித்துள்ளதுடன் குறித்த தளத்தில் புராதன தளம் அல்லது உள்நுழைவது தடையென எவ்வித அறிவித்தலும் இருக்கவில்லையெனவும் சுட்டிக்காட்டப்பட்டதாக சோனகர்.கொம் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.



இப்பின்னணியில், ஜனாதிபதியிடம் இவ்விடயம் பற்றி பேசியுள்ளதாகவும் எதிர்வரும் புதன்கிழமை வழக்கு விசாரணையின் போது பொலிஸ் தரப்புக்கு இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டு பிணை பெறுவதற்கான முயற்சி இடம்பெறும் எனவும் அறியமுடிகிறது.

இதேவேளை, சில அரசியல் பிரமுகர்களும் தாமும் குறித்த மாணவர்களின் விடுதலைக்காக முயற்சி செய்வதாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். உயர் கல்வி கற்கும் மாணவர்கள் இது போன்ற விடயங்கள் பற்றி 'தெரியாது' எனக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்திருந்த அதேவேளை இவ்விடயம் 'தவறுதலாக' நடந்ததாகவே கருதப்பட வேண்டும் என பாதுகாப்பு செயலாளரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




1 comment:

Jfkamilabagem said...

சட்டத்தை அறியாதிருப்பதும் குற்றத்தில் குற்றமே.இலங்கையின் எப்பகுதியில் உள்ள பௌத்த விகாரை மட்டுமல்ல விகாரை காணப்படும் காணிக்குள்ளே செல்லும் போதும் பாதணிகள் கழட்டுவது,தலையை மறைக்காது செல்வதுடன் பல விகாரைகள் பழமை வாய்ந்ததாக தொல்லியல் திணக்கள பராமரிப்பில் இருப்பதால் படங்கள் எடுப்பதும் தவிக்க வேண்டிய ஒன்றாக வியாக்கப்பட்டுள்ளன. ஆகவே மிக நிதானமாக இவ்விடங்களில் சுற்றுலாக்கள்,ஆய்வுகளுக்கு செல்ல வேண்டும்.அத்துடன் விகாராதிபதிகளுடன் பேசுவதற்க்கும் சிங்கள மொழியில், பிரத்தியேக வார்த்தைகளை மட்டுமே பாவிக்க வேண்டும்.இல்லாவிடில் அவர்களை அவர்களது வணக்கவ்தலங்களை அவமதித்ததாக குற்றம் சாட்டப்படுவோம் என்பதை இங்கு செல்லும் அனைவரும் தெரிந்திருத்தல் அவசியம்.இது மட்டுமல்ல எமது வீடுகள் கட்டிடங்கள் 100வருடம் பழமையானது எனத்தெரிந்தால் அவற்றையும் தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் எடுத்து விடுவார்கள் என்பது எமது நாட்டின் எழுதப்படாத சட்டம் என்பது வியப்பான ஒன்றே.எதிலும் விழிப்பிக இருக்க வேண்டியது எமது சமுகத்தின் கட்டாய தேவை.காமிலா பேகம்

Post a Comment