தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை 1000 ரூபாவாக உயர்த்தும் எதிர்ப்பு போராட்டம் ஒன்று இன்று மாலை கொழும்பு புறக்கோட்டை அரசமடிச் சந்தியில் இடம் பெற்றது.
கடந்த சில மாதகாலமாக தமது அடிப்படைச் சம்பளத்தை 1000 ரூபாவாக உயர்த்தி மக்களின் வறுமையைப் போக்குமாறு கோரி பல போராட்டங்களை மலையக மக்களும் அவர்களுக்கு ஆதரவாக ஏனைய மாவட்ட மக்களும் இன, மத பேதமின்றி அரசாங்கத்திற்கும், தோட்டக் கம்பனிகளுக்கும் எதிராக மேற்கொண்டு வருகின்றன.
இந்த விடயத்தை மீண்டும் மீண்டும் அரசுக்கும் சம்பந்தப்பட்ட தோட்டக் கம்பனிகள் மற்றும் அரச அதிகாரிகள், அரசியல் வாதிகளுக்கு தெரியப்படுத்தி வழுச் சேர்க்கும் வகையில் இன்று 1000 ரூபா சம்பள உயர்வைக் கேட்டு ஆயிரம் ரூபா சம்பள அமைப்பினர் தமது எதிர்ப்புப் போராட்டத்தை நடாத்தினர். இப்போராட்டத்தில் இன, மத பேதமின்றி மலையக மக்கள் மட்டுமன்றி பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
-ஏ.எஸ்.எம்.ஜாவித்
No comments:
Post a Comment