அனைத்து சமூகங்களுக்குமான 'ஆளுனராக' இருப்பேன்: அசாத்! - sonakar.com

Post Top Ad

Friday, 4 January 2019

அனைத்து சமூகங்களுக்குமான 'ஆளுனராக' இருப்பேன்: அசாத்!



மேல் மாகாணத்தில் வாழும் அனைத்து சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளுனராகத் தம் சேவை அமையும் என தெரிவிக்கிறார் இன்றைய தினம் மேல் மாகாணத்தின் புதிய ஆளுனராகப் பதவியேற்றுள்ள முன்னாள் கொழும்பு பிரதிமேயரும் தேசிய ஐக்கிய முன்னணி தலைவருமான அசாத் சாலி.

ஆளுனர் பதவியேற்ற பின், சோனகர்.கொம்முக்கு வழங்கிய நேர்காணலின் போது, கொழும்பு நகரின் போக்குவரத்து பிரச்சினைகள், கல்வியபிவிருத்தி மற்றும் பாடசாலைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப் போவதாகவும் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் வளர்ப்பதற்கு பாடுபடப் போவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



முன்னராக கிழக்கு மாகாண ஆளுனராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் அசாத் சாலி மேல் மாகாண ஆளுனராகவும் ஹிஸ்புல்லா கிழக்கு மாகாண ஆளுனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஹிஸ்புல்லாவினால் கைவிடப்பட்ட தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு குருநாகல் மாவட்டத்திலிருந்து ஒருவர் நியமிக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment