மாலியில் ஐ.நா அமைதிப்படையின் அங்கமாக பணியாற்றி வரும் இலங்கை இராணுவ குழுவொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இலங்கை இராணுவத்தின் கப்டன் ஒருவரும் சிப்பாய் ஒருவரும் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
டுவன்சா பகுதியில் இலங்கை இராணுவத்தினர் பயணித்த வாகனம் கன்னிவெடியில் சிக்கியதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஐ.நா அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவத்தினர் அங்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருவதுடன் முன்னரங்கில் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment