ஒக்டோபர் 26 அரசியல் பிரளயத்தின் பின்னணியில் மஹிந்த அணியினர் நாடாளுமன்றில் விளைவித்த கலகங்கள் மற்றும் சேதங்கள் தொடர்பான இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சேத விபரங்களை முழுமையாக சமர்ப்பித்து அதற்கான இழப்பீட்டை குறித்த நபர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளவும் இதற்கென நியமிக்கப்பட்ட குழு பரிந்துரைக்கவுள்ளதாக அறியமுடிகிறது.
ஆயினும், சேத விபரங்கள் குறித்த இறுதி மதிப்பீடு இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment