போதைப் பொருள் ஒழிப்பு: ஜனாதிபதியிடம் பாராட்டு பெற்ற கான்ஸ்டபிள் தௌபீக்! - sonakar.com

Post Top Ad

Thursday, 31 January 2019

போதைப் பொருள் ஒழிப்பு: ஜனாதிபதியிடம் பாராட்டு பெற்ற கான்ஸ்டபிள் தௌபீக்!


போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக செயற்பட்டோருக்கான ஜனாதிபதியின் பாராட்டுச் சான்றிதழைப் பெற்றுள்ளார் கிண்ணியாவைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் எம்.ஏ.சீ.தௌபீக்.



இவ்வாரம் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இடம்பெற்ற போதை ஒழிப்புக்காக சிறப்பாகச் செயற்பட்டோருக்கான பாராட்டு வைபவத்தில் வைத்தே இவரையும் பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தினசரி போதைப்பொருள் கைப்பற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

-ஹஸ்பர் ஏ ஹலீம்

No comments:

Post a Comment