கல்முனை மாநகர சபை உறுப்பினரின் மனிதாபிமான நடவடிக்கை - sonakar.com

Post Top Ad

Tuesday, 8 January 2019

கல்முனை மாநகர சபை உறுப்பினரின் மனிதாபிமான நடவடிக்கை



அம்பாறை  கல்முனை மாநகர  பகுதியில் மனநலம் குன்றிய நிலையில் அலைந்து திரிந்த இளைஞனை    மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன்  முயற்சியினால்  கல்முனை ஆதார வைத்தியசாலையின் மனநோய்ப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.



கல்முனை பகுதி மக்களின் உதவியுடன்  குறித்த மனநலம் குன்றிய இளைஞனை அணுகி அவரை தலைமுடி வெட்டி  குளிப்பாட்டிய பின்னர் உணவு கொடுத்து  மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் பின்னர்   வைத்தியசாலையில் சேர்த்துள்ளார்.

குறித்த நபர் பெரியகல்லாறு பகுதியை சேர்ந்த கோபி என்பவர் எனத்  அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்  இந்த மனிதாபிமானப் பணியை செய்த உறுப்பினருக்கு அப்பகுதி மக்கள்  பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

-Farook Sihan

No comments:

Post a Comment