யாழ்ப்பணம் ஜின்னா வீதியை பிறப்பிடமாகவும் தற்போது சதாமியா புரம் 7 ஆம் குறுக்கில் வசித்தவருமான முஅலிமா ஜனுபா என்று அழைக்கப்படும் ஜெமீலா இன்று செய்வாக்கிழமை வபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார் மர்ஹூம்களான சாஹுல் ஹமீட்,மரியம்பு ஆகியோரின் மகளும்,அப்துல் முனாபின் மனைவியும்,மர்ஹூம் மரைக்கார் லெப்பை (முன்னாள் யாழ்,சின்னப்பள்ளிவாசல் கதீப்)அவர்களின் மருமகளும்,அப்துல் மலிக் மவ்லவியின் தாயும்,ஹமீதா,(லங்கா கிளாஸ் ஹவுஸ்) சனூன்,ராஜி ஆகியோரின் சகோதரியும்,சுமையா,சும்ரா,சுலைம் ஆகியோரின் வாப்பும்மாவும் ஆவார்.
அன்னார் கடந்த 25 வருடங்களாக பல ஆலிம்களை ஹாபிழ்களை உலமாக்களை உருவாக்கிய மதரஸாவை ஸ்தாபித்து நடத்தி , வழிநடத்தி ,கற்பித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது .
ஜனாஸா நல்லடக்கம் , இன்ஷா அல்லாஹ் இன்று இரவு(08/01/2019) இஷா தொழுகையின் பின் புத்தளம் தில்லையடி மையவாடியில் இடம்பெறும்.
புத்தளம்,தில்லையடி,சதாமியா புரம்,7ம் குறுக்கு தெரு.
தகவல்: அப்துல் மலிக் மெளலவி ( 0718618749)
No comments:
Post a Comment