தேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலி மேல் மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கிழக்கின் ஆளுனராக எம்.எல். ஹிஸ்புல்லா ஜனாதிபதியினால் சற்று முன்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னராக அசாத் சாலியே கிழக்கு மாகாண ஆளுனராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் இறுதிக் கட்டத்தில் ஹிஸ்புல்லாவுக்கு அப்பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மத்திய மாகாணத்தின் ஆளுனராக மைத்ரி குணரத்ன , வடமத்திய மாகாணத்தின் ஆளுனராக சரத் ஏக்கநாயக்க,வட-மேல் ஆளுனராக பேஷல ஜயரத்ன ஆகியோரும் இன்று நியமனம் பெற்றுள்ளனர்.
இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக இரு முஸ்லிம் ஆளுனர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment