அநுராதபுர பௌத்த புராதன தளங்கள் : அறிந்து கொள்ளுங்கள்! - sonakar.com

Post Top Ad

Sunday 27 January 2019

அநுராதபுர பௌத்த புராதன தளங்கள் : அறிந்து கொள்ளுங்கள்!


அநுராதபுரத்துக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புராதான ஸ்தானங்களை பார்வையிடச் செல்வோர் / கல்விச் சுற்றுலா செல்லும் மாணவர்கள் அங்கு 'அட்டமஸ்தான' (අටමස්ථාන) என்றழைக்கப்படும் பௌத்தர்களின் எட்டு புனிதஸ்தலங்கள் பற்றி அறிந்து கொள்வது காலத்தின் அவசியமாகிறது. அவையாவன:


1-வெள்ளரச மரம் 
2-ருவன் வலிசாய  
3-லோவா மஹா பாய  
4-தூபா ராமய 
5-மிரிஸ வெட்டிய
6-அபய கிரிய  
7-சேத்த வணாராமய
8- லங்காராமாய

அப்பிரதேசத்தில் மிகவும் மரியாதையுடன் நடந்து கொள்வதும், அவ்விடங்களை அசுத்தம் செய்யாதிருப்பதும் , அம்மரங்களை சேதம் செய்யாதிருப்பதும் , அச்சிலைகளுக்கு புற முதுகு காட்டி Photo க்கள் எடுக்காதிருப்பதும் , பாதணிகளை கழற்றி விட்டுச் செல்வதும் , தலையை மறைக்காதிருப்பதும் பௌத்தர்களால் எதிர்பார்க்கப்படும் விடயங்களாகும்.

அதே போல் நாடு பூராக இருக்கும் பிற மதத்தலைவர்கள் , வணக்கஸ்தலங்கள் ,சமய அடையாளங்கள் போன்றவற்றை அறிந்திருப்பதும் எமது தார்மீகப் பொறுப்பாகும்.

அனுராதபுர புனித நகரம் 1982 ஆம் ஆண்டு யுனெஸ்கோ நிறுவனம் (UNESCO - United Nations Educational, Scientific and Cultural Organization) மூலம் உலக பாரம்பரிய தளங்களில் (World Heritage Site) ஒன்றாக பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் இது போன்ற இன்னும் பல முக்கிய 8 இடங்கள் UNESCO நிறுவனம் மூலம் World Heritage Site ஆக பிரகடனப் படுத்தப்பட்டுள்ளன.

1-அனுராதபுரம் (1982)
2-பொலன்னறுவை (1982)
3-சிகிரியா (1982)
4-சிங்கராஜக் காடு (1988)
5-கண்டி (1988)
6-காலி (1988)
7-தம்புள்ளை பொற்கோவில் (1991)
8-சிவனொளி பாதமலை உட்பட்ட இலங்கையின் மத்திய மலைப்பகுதிகள் (2010)

உரிய அனுமதி இல்லாமல் இவற்றுக்குள் நுழைவது சட்ட விரோதமாகும் , சேதம் ஏற்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும்.


-ஹரீஸ் ஸாலிஹ் 

No comments:

Post a Comment