மாகாண சபை தேர்தல்கள் இடம்பெற்றாலும் இல்லாவிட்டாலும் டிசம்பர் 7ம் திகதி அல்லது 2020 ஜனவரி மாதத்துக்குள் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுவது உறுதியென தெரிவிக்கிறது தேர்தல் ஆணைக்குழு.
இவ்வருடம் ஒக்டோபர் 22ம் திகதிக்குள் வாக்காளர் பட்டியலை பூரணப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை டிசம்பர் 7ம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் வகையில் நவம்பரிலேயே அறிவிப்பு மேற்கொள்ளப்படலாம் என நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
எவ்வாறாயினும் தனது பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்து விட்டே மைத்ரிபால சிறிசேன விலகிக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றமையும் பெரும்பாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக அவரே போட்டியிடுவார் என இதுவரை தெரிவிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment