கிண்ணியாவில் மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களை கைது செய்யத் தான் உத்தரவிட்டிருப்பதாகவும் அது யாராக இருந்தாலும் விடப்போவதில்லையெனவும் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
மணல் கொள்ளையை கடற்படையினர் தடுக்க முற்பட்ட வேளை அங்கு ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையையடுத்து வானை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய நேர்ந்ததாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். எனினும், அவ்வேளையில் உயிர்தப்பவென ஆற்றில் பாய்ந்த இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
எனினும், கடற்படையினர் தாக்கப்பட்டது குறித்து கடும் அதிருப்தி வெளியிட்டுள்ள ஜனாதிபதி மணல் கொள்ளையர்களை கைது செய்ய கடற்படையினருக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment