அலவத்துகொட - இயால்காமம் பகுதியில் நடாத்தப்பட்டு வரும் குப்பை சேகரிப்பு நிலையத்துக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தற்காலிகமாக குப்பைகள் சேகரிப்பதை நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது அக்குறைணை பிரதேச சபை.
மக்கள் போராட்டததிற்கு மதிப்பளித்து குறித்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ள போதிலும் குறித்த தளத்தை முழுமையாக மூடிவிடும் அதிகாரம் தனக்கில்லையென தெரிவித்துள்ள பிரதேச சபை தலைவர் இஸ்திஹார் இது தொடர்பில் ஜனாதிபதிக்கு தகவல் தெரிவித்துள்ளதாக விளக்கமளித்துள்ளார்.
ஜனாதிபதியின் உத்தரவைத் தழுவி அடுத்த கட்ட நடவடிக்கைகள் இடம்பெறும் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-மொஹொமட் ஆஸிக்
-மொஹொமட் ஆஸிக்
No comments:
Post a Comment