இனியும் தாமதமின்றி மாகாண சபை தேர்தல்களை நடாத்துமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளது தேர்தல் ஆணைக்குழு.
நீண்ட இழுபறியின் பின் கடந்த வருடம் நடாத்தப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அரசாங்கம் பாரிய பின்னடைவைச் சந்தித்திருந்தது. இந்நிலையில் மாகாண சபைகளுக்கான தேர்தல்களும் எல்லை நிர்ணயத்தைக் காரணங்காட்டி தொடர்ந்து பின் போடப்பட்டு வருகிறது.
இப்பின்னணியில், நாடாளுமன்ற அமர்வொன்றின் போது இதற்கான இணக்கப்பாட்டை எட்டி தேர்தலை நடாத்த வழிவிடுமாறு தேர்தல் ஆணைக்குழு கடிதம் மூலம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment