போதைப் பொருள் வர்த்தகர்களுக்கெதிரான யுத்தத்துக்குத் தான் தயாராக இருப்பதாக தெரிவிக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என அவ்வப்போது சொல்லி வரும் மைத்ரி அண்மையில் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளை வெகுவாக புகழந்திருந்தார்.
இன்றைய தினமும் குடு சித்தீக் பிணையில் விடுதலையாகியுள்ள நிலையில் வேலே சுதா போன்ற பிரபல போதைப்பொருள் மன்னர்கள் மரண தண்டனையுடன் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். அத்துடன் நாடாளுமன்றிலும் போதைப் பொருள் வர்த்தகர்களுக்கு உதவுவோர் இருப்பதாக ரஞ்சன் ராமநாயக்க மற்றும் ஹர்ஷ டிசில்வா தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment