யாழ் பல்கலைக்கழகத்தின் முஸ்லிம் மஜ்லிஸ் மாணவர்களால் தொகுக்கப்பட்ட இன்கிளாப் -08 எனும் வருடாந்த 8வது சஞ்சிகை வெளியீட்டு விழா எதிர்வரும் 26ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு கைலாசபதி கேட்போர் கூடத்தில் மஜ்லிசின் தலைவர் எம். முனீர் தலைமையில் இடம் பெறவுள்ளது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக யாழ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ஆர். விக்ணேஷ்வரனும், கௌரவ அதிதிகளாக பேராதெனிய பல்கலைக் கழகத்தின் பகுதிநேர விரிவுரையாளர் பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ் மற்றும் யாழ் பல்கலைக்கழகத்தின் முஸ்லிம் மஜ்லிசின் நிறுவனரும், ஓய்வு பெற்ற பல்கலைக்கழ பதிவாளருமான ஏ.எல்.ஜவ்பர் ஷாதிக் மற்றும் பல விஷேட அதிதிகளுடன் கல்விமான்கள், புத்தி ஜீவிகள், பல்கலைக்கழக உயர் பீட பொறுப்பாளர்கள், விரிவுரையாளர்கள் எனப் பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
-ஏ.எஸ்.எம்.ஜாவித்
-ஏ.எஸ்.எம்.ஜாவித்
No comments:
Post a Comment